கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் செல்லும் ரோட்டின் அருகில் ஒரு மயானம் உள்ளது. இங்கு அனைத்து சமுதாயத்தினர்களும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது சமீப காலமாக மயானத்திலும் மற்றும் மயானத்தைச் சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து மயானத்தை ஆக்கிரமித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை இப்பகுதிக்கு எடுத்துச் செல்லும்போது மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மயானத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.