அரியலூர் மாவட்டம் கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மோட்டார் வசதியுடன் கூடிய மினி டேங்க் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை இயக்க அமைக்கப்பட்டுள்ள சுவிட்ச் போர்டில் வயர்கள் கண்டபடி இருப்பதால் வயர்களை தொட்டால் மின்சாரம் பாய்கிறது. மோட்டாரை இயக்க முற்படும்போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவிட்ச் போர்டை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.