அரியலூர் பஸ் நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த காந்தி சிலை முன்பு பஸ்சில் பயணம் செய்வதற்காக பயணிகள் பலரும் காத்திருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடைக்கான குழி அமைக்கப்பட்டு அதன்மீது சிமெண்டு சிலாப் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிமெண்டு சிலாப் முழுவதும் சேதமடைந்து அதிலுள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதுகுறித்த ஆபத்தை உணராமல் வயதானவர்கள் பலரும் அதன்மீது அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.