சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் போக்குவரத்து மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிவதுடன் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.