சேந்தமங்கலம் குப்பநாயக்கனூரில் புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் மழைநீர் போக்கி கான்கிரீட் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் பெய்த மழையால் அந்த கான்கிரீட் தளத்தில் உள்ள நீர் போக்கி சேதமாகி உள்ளது. இதனால் அந்தவழியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சேதமான மழைநீர் போக்கியை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-சம்பத், குப்பநாயக்கனூர்.