கடமலைக்குண்டுவில் தேனி பிரதான சாலையோரங்களை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை விரைந்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.