ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-10-26 14:28 GMT
செஞ்சி காந்தி கடை வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்