கோத்தகிரி தாசில்தார் அலுவலக கட்டிடத்தின் வெளிப்புறம் பல இடங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து செங்கற்கள் தெரியும் வகையில் உள்ளது. இதனால் கட்டிடம் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கட்டிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.