ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு மாமரத்துப்பாளையம் சக்தி தேவி நகரில் உள்ள பெயர் பலகையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பலகையில் உள்ள ‘சக்தி தேவி நகர்’ என்ற பெயர் சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் எந்த பகுதி என்று தெரியாமல் குழப்பமடைகிறார்கள். எனவே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.