பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-10-19 13:45 GMT

கரூர் மாவட்டம் ஜெகதாபி ஊராட்சி பொம்மணத்துப்பட்டி, அய்யம்பாளையம் மேற்கு, ஜெகதாபி கிழக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்து, பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் மழை மற்றும் வெயில் காலங்களில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்