திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 80 ஆண்டு கால பழமையான அரசமரம் அருகில் பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி மற்றும் மின்மாற்றி ஆகியவை உள்ள நிலையில், இதன் கிளைகள் வானுயர வளர்ந்து சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இதன் கிளைகள் மழைக்காலம் மற்றும் காற்றடிக்கும் நேரங்களில் முறிந்து கீழே விழுகிறது. அவ்வப்போது மின்மாற்றியின் மீது விழுந்து தீப்பொறிகள் ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து கிளைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.