சேறும், சகதியுமாக மாறிய உழவர்சந்தை

Update: 2025-10-12 16:17 GMT

கம்பம் உழவர்சந்தையில் ஏராளமான கடைகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் உழவர் சந்தையில் உள்ள கடைகளின் மேற்கூரை, தரைத்தளம் ஆகியவை சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் உழவர்சந்தைக்குள் மழைநீர் புகுந்துவிடுவதால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே கடைகளை சீரமைப்பதுடன், சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்