விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ள அயன்கொல்லங்கொண்டான் கண்மாயில் கழிவுநீர் கலப்பதோடு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலை முற்றிலுமாக பாதிப்படைகிறது. இதனால் கண்மாய் நீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கண்மாயில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், கண்மாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?