குரங்குகள் தொல்லை

Update: 2025-10-12 14:40 GMT
திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் உள்ள கடை மற்றும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் விரட்ட வருபவர்களையும் கடிக்கப் பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித பயத்துடனேயே வெளியே வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்