சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கிறது. மேலும் இந்த கட்டிடம் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. எனவே பாழடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.