கரூர் மாவட்டம் சுக்காளியூர், மண்டிக்கடை, பெரியார் வளைவு, கோவை ரோடு பைபாஸ் ரவுண்டானா, வடிவேல்நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் கரூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு 2 பஸ் மாறி செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்திலிருந்து செல்லாண்டிபாளையம், சுக்காளியூர், மண்டிக்கடை , பைபாஸ் ரவுண்டானா, வையாபுரிநகர் வழியாக பழைய பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.