ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையில் திரியும் தெருநாய்களை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.