கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி பெண்களுக்கான சுகாதார கழிவறை கட்டப்பட்டது. இந்த சுகாதார கழிவறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் பழுதடைந்து, கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வெளியேறும் வகையில் பிளாஸ்டிக் குழாயை சீரமைத்து, சுகாதார கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.