அரசமரம் அகற்றப்படுமா?

Update: 2025-10-12 11:11 GMT

திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு அருகே முத்தழகு பிள்ளைத்தெரு பகுதியில் அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் பெரிதாக வளர்ந்து சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. மேலும் கிளை மற்றும் வேர்கள் படர்ந்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகிறது. இதனால் சுவர்களில் விரிசல் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி இந்த அரசமரத்தை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்