மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கிணறு ஒன்று மெயின் ரோட்டை ஒட்டி உள்ளது. இந்த கிணற்றில் நீர் நிரம்பி அபாய நிலையில் உள்ளது. ஆனால் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவர்கள் இந்த ரோட்டின் வழியாக சென்று வருகிறார்கள். சாலையை ஒட்டியுள்ள இந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சசிராகவன், நங்கவள்ளி.