தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். ஆனால் அங்கு கட்டிட வசதி இல்லாததால் வியாபாரிகள் திறந்தவெளியில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க வாரச்சந்தைக்கு கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.