கடமலைக்குண்டுவை அடுத்த முத்தாலம்பாறையில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.