திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், ச.கண்ணனூர் மேற்கு, சமயபுரம் இந்திரா காலனியில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் பெரும் அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும் கடிக்க துரத்துகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.