சீரமைக்கப்படாத காய்கறி மார்க்கெட்

Update: 2025-10-05 09:43 GMT

அரவக்குறிச்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி மார்க்கெட் உருவாக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் நேரடியாக தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இதனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தினமும் மார்க்கெட்டுக்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை புத்தம் புதியதாக வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி மார்க்கெட் இருந்த பகுதி வெறிச்சோடி செடி கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. தினசரி மார்க்கெட் இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அரவக்குறிச்சியில் பழைய தினசரி காய்கறி மார்க்கெட் இருந்த பகுதியை சீரமைத்து மீண்டும் தினசரி காய்கறி மார்க்கெட் உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்