கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி சார்பில் ரூ.13 லட்சம் செலவில் சேவை மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் அந்த கட்டிடம் செயல்படாமல் உள்ளதால் நன்செய் புகழூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை சேவை மையத்தில் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.