செஞ்சி எம்.ஜி.ஆர்.நகர், மேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலோியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.