ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மாலை நேரங்களில் கொசுத் தொல்லை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள், முதியோர் தூக்கமின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து புகை அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?