ராமநாதபுரம் மாவட்டம் யானைக்கல் வீதி, ஈசா பள்ளி வாசல், அலங்காசேரி தெரு வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை தொட்டி மூடிகள் (மேன்ஹோல்) சீரமைக்கப்படாமல் பள்ளமாக உள்ளது. இதனை அறியாமல் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இதில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீரமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.