அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்

Update: 2025-09-28 15:15 GMT

மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் செல்லும் பைபாஸ் சாலையில் சிலர் ஆபத்தை உணராமல் தங்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி மேற்கண்ட சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்