கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அதிகளவு தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இப்பகுதி வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்திச் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் பதற்றத்துடனே செல்கின்றனர். எனவே மலைக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.