கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் ஓய்வு எடுக்க அமைக்கப்பட்டுள்ள காத்திருப்போர் அறையின் மேற்கூரை தகரங்கள் பழுதடைந்து உள்ளன. காற்றில் அந்த தகரங்கள் பறந்து கீழே விழும் நிலை காணப்படுகிறது. இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே காத்திருப்போர் அறையின் மேற்கூரையை உடனடியாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.