ஊட்டி பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சேரிங்கிராஸ் செல்லும் சாலையோர நடைபாதையில் கொஞ்சம், கொஞ்சமாக மண் சரிந்து வருகிறது. மேலும் அங்கு தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்து தாறுமாறாக உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் காயமடைய வாய்ப்பு உள்ளது. இதனால் பலரும் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்த பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.