செடிகள் அகற்றப்படுமா?

Update: 2025-09-28 07:30 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசியநெடுஞ்சாலையில் மந்தாரம்புதூர் உள்ளது. இந்த ஊரின் தென்புறம் உள்ள தேவகுளத்தில் இருந்து ஒரு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் கோவளம் அருகில் உள்ள தலக்குளத்திற்கு செல்கிறது. இக்கால்வாய் என்.பி.கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அதிகப்படியான தண்ணீர் இந்த கால்வாயில் பாய்ந்து பெரும் சேதங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. தற்போது இந்த பாசன கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பாசன கால்வாயில் செடிகொடிகளை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பீட்டர் ஜெயசிங், வெள்ளையன்தோப்பு.

மேலும் செய்திகள்