சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-09-21 18:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை திறந்தவெளியில் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. மேலும் சிலர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் உடைந்த கண்ணாடி துண்டுகள் கால்நடைகளின் கால்களில் காயம் அடைவதாகவும், மருத்துவமனை பணியாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, போச்சம்பள்ளி.

மேலும் செய்திகள்