கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்திலும், பஸ் நிலைய நுழைவு வாயிலிலும், உள்புறமும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல பஸ் நிலையத்தில் பலரும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்கவும், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.