தியாகதுருகம் அருகே விருகாவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். அதுமட்டுமின்றி குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டும் செல்கின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.