பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-09-21 14:15 GMT

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி கரைப்பாளையம் அருகே ஆலமரத்து மேடு பகுதி வழியாக கொடுமுடி - பரமத்தி வேலூர், நொய்யல் - கரூர் செல்லும் தார்சாலை செல்கிறது. இந்நிலையில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலமரத்து மேடு பகுதிக்கு வந்து, அங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் பஸ்சுக்காக காத்துநிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்