ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் உள்ள உவர் நீரை நன்னீராக்கும் எந்திரம் கடந்த சில வாரங்களாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிக்க போதிய குடிநீர் கிடைக்காததால் மிகவும் சிரமமடைகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதாகி கிடக்கும் எந்திரத்தை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?