கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் 8-வது வார்டு காந்தியார் பள்ளி அருகில் கட்டண பொதுக்கழிவறை இருந்தது. நாளடைவில் இந்த பொதுக்கழிவறை மக்கள் பயன்படுத்த முடியாதபடி சேதம் அடைத்தது. இதை இடித்துவிட்டு, நகராட்சி சார்பில் மாற்று பொதுக்கழிவறை நவீன முறையில் கட்டுப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்ற நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை. இதன் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறையும் கட்டப்பட்டு உள்ளது. இதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரண்டு கழிவறைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.