குதிரைகள் தொல்லை

Update: 2025-09-21 10:19 GMT

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள சாலையில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றோடு, ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே வருகின்றன. இதனை எதிர்பாராத வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்