பந்தலூரில் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் கால்நடைகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலைகளிலும் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தை அசுத்தப்படுத்துகின்றன. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.