புதர்மண்டி கிடக்கும் கழிவறை கட்டிடம்

Update: 2025-09-14 14:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கடவாசல் தபால் நிலையம் அருகே இலவச கழிவறை கட்டிடம் உள்ளது. இந்த கழிவறை கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. கழிவறை கட்டித்தை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறை கட்டிடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும.



மேலும் செய்திகள்