மயிலாடுதுறை வழுவூர் கிராமத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடத்தின் மேற்பகுதி சேதமடைந்து உள்ளது. மேற்பகுதியில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இதனால் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. நூலகத்துக்கு வரும் வாசகர்கள் மீது சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தின் மேற்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.