தடு்ப்பு சுவர் ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-09-14 14:11 GMT

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் அடுத்துள்ள தனியார் எடைநிலையம் அருகே சாலையோரத்தில் போர்வெல் குழாய் இணைப்பு ஒன்று உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் தற்போது சாலை அகலப்படுத்தும் பணியின் போது சாலை ஓரத்தில் உள்ளது. எனவே அதற்கு தகுந்த பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும். தார் சாலையை ஒட்டிய நிலையில் அந்த போர்வெல் உள்ளதால் அருகிலேயே பாலம் ஒன்று உள்ளது. புதிதாக வருபவர்களுக்கு போர்வெல் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

-ராமசாமி, அணியாபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்