மாரண்டஅள்ளி அடுத்த கோணம்பட்டி கிராமத்தில் நூலகம் உள்ளது. தற்போது இந்த நூலக கட்டிடத்தில் மது அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் பாட்டில்களை உடைத்து சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த பகுதியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
-கார்த்திக், மாரண்டஅள்ளி.