அரூர் அருகே கெளாப்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 245 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் முன்புறத்தில் மட்டும் சுற்றுச்சுவர் உள்ளது. மற்ற 3 புறங்களில் சுற்றுச்சுவர் இல்லாததால் நாய்கள், கால்நடைகள் ஆகியவை பள்ளி வளாகத்துக்குள் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இளவரசன், அரூர்.