புளியங்குடி நகராட்சி அலுவலகம் அருகே வல்லப விநாயகர் கோவில் தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த பகுதியில் செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.