சிவங்கங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக திரிவதால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் கால்நடைகள் மீது வாகனஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்தவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?