கரூர் மாவட்டம் புகழூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெருபாலான நாய்கள் டி.என்.பி.எல். சாலையில் தான் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காகித ஆலைக்கு வேலைக்கு செல்பவர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் முன்பு தெருநாய்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.