பராமரிக்கப்படாத மைதானம்

Update: 2025-09-14 11:16 GMT

கோத்தகிரி காந்தி மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வீரர்கள் வந்து செல்கின்றனர். மேலும் தினந்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மைதானத்தின் தரையில் புற்கள் வளர்ந்தும், ஓரங்களில் புதர்கள் வளர்ந்தும் பராமரிப்பின்றி உள்ளது. எனவே மைதானத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்